உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     => முள்ரோஜா
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - உறவு


                            முகப்பு

உறவு

-- நிலா மகள் 

சில நேரங்களில்

என்

உறக்கத்தின் போதும்

என்னோடு

உறவாடிக்கிடப்பாயே

உறங்காமல்....

நீ

ஓட்டப் பந்தய வீரனல்ல

இருந்தும் 

நீ ஒடுவதால்  தான்

உனக்கும் என்னகும்

ஒர்

உன்னத உறவு

இன்னும் தொடர்கிறது.....

உன்னைப்

படைத்தவனுக்குத்

தெரியுமா?

நான்

உன் சொந்தக்காரனென்று.....

உனக்கு

ஞாபகமிருக்கிறதா

ஒரு நாள்

உன் முகம் முழுவதும்

கண்ணிர்த்துளிகள்....

கேட்டதற்குச்

சொன்னாயே ஒர் காரணம்

மன்னித்துக்கொள்

தெரியாமல்

நனைத்து விட்டேன்...

மனிதருக்குத்தான்

நிறைய

போலி முகங்கள்

உனக்கு

என்றும்

ஒர் முகம் தான்..

உன்னை

என் தாத்தா வைத்திருந்தாராம்

பின் என்

தந்தை வைத்திருந்தாராம்

இப்போது

நீ என்னிடம....

உன்

துடிப்பும்

என் இதயத்துடிப்பும்

ஓன்றுதான்..

நீ

சோம்பிக்கிடந்தால்

உன் காதைத்திருகுவேன்

உடனே

துடிப்புடன் சுழல்வாயே..

என்

அருமைக்

கை கடிகாரமே...

இராண்டு

நாட்களாய்

நீ இன்றி

உன் முகமின்றி

என்

கை தோன்றுகிறது

விதவையாய்....

-- நிலா மகள் 

snila10@rediffmail.com

Today, there have been 6 visits (6 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி