உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     => சாதனையின் எல்லை
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - திறவு கோல்


                     முகப்பு

திறவு  கோல்

                       -பாலசுப்ரமணியன்

 

படுத்தும்,நின்றும்  

இடத்தை  அடைக்கும்

பெட்டிகள்  பெரியவை

 

சாவிகள்  சிறியவை

சட்டைபையில்  வைத்தும்

சட்டென்று  தொலைபவை

 

நாடு  விட்டு  நாடு  

நகர,நிரப்பிய  பெட்டியை

நடுவீட்டில்  வைத்து,திறக்க

 

எத்தனித்த  போதுதான்

என்னோடு  வராமல்,சாவி

பின்தங்கிப்போனது  தெரிந்தது

 

பூட்டை  உடைக்காது

பொருளை  எடுக்க,நல்ல

பெட்டிக்கு  ஒரு  கள்ளசாவிதேடி

 

கையேந்தினேன்  நான்

கொத்தாக  பல  சாவிகளை  

கொடுத்தனர்  அக்கம்,பக்கத்தார்

 

பல  நுழையவே  இல்லை

சில  பொருந்தியும்,திருகிட

இயலவில்லை,முயன்று,முயன்று..

 

வியர்த்த  வினாடியில்  

விடிவெள்ளியாய்,ஒரு  கூன்

விழுந்த  சாவி,அதனைத்திறந்தது

 

திறவுகோல்கள்  இன்றி

திறந்த  பெட்டிகளை  மூடவோ

திரும்பவும்  திறக்கவோ  இயலாது

 

உள்ளம்  என்கின்ற

உன்னதமான  பெட்டி  மட்டும்

உட்புறமிருந்தே  திறக்கின்றது

 

சலனப்படும்  அதன்

சாவித்துவாரம்  வழியாக  புகும்

சன்னமான  சொற்கள்,சைகைகள்

 

சிப்பிக்குள்  முத்தாகி

சின்ன  சாவியாகி,கதவு  திறக்க

சிறைபட்ட  சிந்தனைக்கு  விடுதலை!

                  -பாலசுப்ரமணியன்

BalaSubramanian@ZAMILSTEEL.com

Today, there have been 7 visits (14 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி