முகப்பு
தொடரும் வாழ்வினில்
அறிவுநிதி
எரிந்துகொண்டு இருக்கிறேன்
என்மீது ஏவப்பட்ட வார்த்தைகளால்
நொறுங்கிக்கொண்டிருக்கும் கணத்தில்
எங்கும்
பரவிக்கொண்டிருகு;கும் வலியை
கண்கள் வடித்துக்கொண்டிருக்கிறது
மொத்தமும் பெரும் புறக்கணிப்பில்
மரணத்தின் வாசல் திறந்தே கிடக்கிறது
மரணமும் ஏதுவாகிறது
சலிப்புகள் வௌ;வேறாக பாவித்தாலும்
நாட்குறிப்புகள் போல ஒன்றன்பின் ஒன்றாக
காத்து நிற்கின்றன
கனவுகள் தீர்ந்தபாடில்லை
நினைவெங்கும்
நெளிந்துகொண்டும் கனன்றுகொண்டும் இருக்கிறது
தேடல்கள் இழப்புகளை நிறைவுசெய்கின்றன
ஏதுமில்லாதது போல் இருந்தும்
எதன்பின்னால்
வாழ்க்கையும்
நானும்.
கவிதை: அறிவுநிதி