உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - நள்ளிரவு நகரம்!


முகப்பு

நள்ளிரவு நகரம்!

 

-          கென்

 

கருமைப்பூசிய இருளுக்கு சிரிப்பினை
தந்து நிற்கின்றன,
இலை,கிளையில்லாத மரங்கள்
தலை குனிந்தபடி மின்கம்பமாய்...


தெருவின் மூலைகளில் பூக்கள்
சுமந்து காத்திருக்கிறார்கள்,
நவீன  யுகத்து கண்ணகிகள்
காற்சிலம்பிற்கு பதிலாய் உடலை விற்றபடி...


ஒளியிரைத்து இருள் நகர்த்தி விரைகிறது

ஆள்பிடிக்கும் வண்டிகள் வேறு தேசத்து சாட்டைக்காய்
அவ்வப்போது..

கடமையாற்றியபடி வசூலிக்கிறார்கள் உங்கள் நண்பர்கள்,
காந்தியின் பொக்கைவாய் சிரிப்பில் நட்பு மணக்க ...
வானக்கூரையில் உறங்கும் குடும்பங்கள் ,
மிதிவண்டி தேநீர்க்காரர்கள்,போதைக்குறையா
தேசத்து மன்னர்களோடு...

இருள் மட்டும் தனியே இன்னும்
கருமைப் பூசியபடி....

கென் -93831 5502 - jakey342001@gmail.com

 

Today, there have been 7 visits (18 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி