|
|
முகப்பு
பெண்
கோ.கண்ணன்
உளி வேண்டாம்
ஒரு
துளி மட்டும்
உன்னிடம்
தந்தால் போதும்
உயிர்சிலை
செய்து தரும்
அதிசய சிற்பி நீ!
என்னிடம்
இறைவனை விடவும்
உயர் நிலை
உனக்குத்தான்
உலகையும்
உயிர்களையும்
இறைவன் படைத்ததாய் - ஒரு
நம்பிக்கை
எந்த இறைவனும்
தன்னுள்
இன்னுமொரு
உயிர் சுமந்ததாய்
சான்றுகளில்லை
எல்லா சாமிகளும்
கருவறைக்குள்
அடைந்திருக்கும் போது
கருவறையே
உனக்குள்
அடைந்திருக்கிறதே.
இப்போது
ஒப்புக்ககொள்
நீ
இறைவனை விடவும்
உயர்நிலையானவள்!
கவிஞர்: கோ.கண்ணன்
|
|
Today, there have been 7 visits (19 hits) on this page!
|
|
இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி |
|