உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - விளங்கா பொருள்


முகப்பு

விளங்கா பொருள்

                                           - ராதிகா பாலா

 

முழுவதாகப் பார்த்தான்

முழுநிலவில் என்னை

முத்தே நீ எப்படி வானில்

மண்ணில் ஒரே நேரத்தில்

 

உன் கண்ணில்,விண்ணில்

உள்ள நட்சத்திரம் ஒளிர

உன் கூந்தலிலும் அங்கும்

உருவானது கார்மேகம் என

 

உருகினான் அவன் காதலில்

உளறினான் எனது காதில்

உருமாறும் கால சுழற்சியில்

உருண்டோடும் ஜாலத்தில்

 

இன்று ஒரு அமாவாசையில்

இருள் எப்படி வானத்திலும்

இங்கே உன் முகத்திலும்

இருக்கிறது ஒரே நேரத்தில்

 

வெள்ளி அது விடியலில்

வெள்ளை உன் கூநதலில்

வெறுப்புடன் சொல்லியவன்

எள்ளி நகைத்தான் கேலியில்

 

மரத்துப் பூக்கள் காய்த்து

பழுத்து கனியும்,விதைக்கும்

மனிதப் பூவையர் கதையில்

 

(ன்)னியும் காய்ந்து உதிர்ந்திட

மண்,பெண்,பொன் வரிசையில்

பெண்,ஆணுக்கு..விளங்கா பொருள்!

 

                                         - ராதிகா பாலா

 BalaSubramanian@ZAMILSTEEL.com

Today, there have been 7 visits (26 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி